சாப்ட் பூரி
சமையல் வல்லுநர்: Mangayarkarasi தேதி : jun 3, 2015 ஆயத்த நேரம்: 10 minutes சமையல் நேரம்: 20 minutes பரிமாறும் அளவு: 3 loaf தேவையான பொருட்கள்: - கோதுமை மாவு – அரை கிலோ - மைதா மாவு – 50 கிராம் (விரும்பினால்) - சர்க்கரை – அரை தேக்கரண்டி - மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி - தண்ணீர், உப்பு, எண்ணைய் - தேவைக்கேற்ப கோதுமை மாவுடன் மைதா மாவு, உப்பு, சர்க்கரை, மிளகுத்தூள் மற்றும் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும். பின் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்கு பிசைவதை விட கொஞ்சம் கெட்டியாக பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை ஒரே அளவு உருண்டைகளாக பிடித்து வைக்கவும். பின் சப்பாத்தி கல்லில் எண்ணெய் விட்டு வட்டமாகத் தோய்க்கவும். வாணலியில் தேவையான எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் தேய்த்த மாவை போட்டு எடுக்கவும். ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி விடவும். சுவையான சாப்ட் பூரி ரெடி. விரிவுரை : இந்த சாப்டான பூரியை சூடாக உருளைக்கிழங்கு மசாலுடன் பரிமாறலாம். செய்முறை: ...