அரைக்கீரைப் பொரியல்

 சமையல் வல்லுநர்:
 தேதி : jun 3, 2015


அரைக்கீரைப் பொரியல்
அரைக்கீரைப் பொரியல்

விரிவுரை :

  அரைக்கீரைப் பொரியல் எல்லா வயதினருக்கும் ஏற்ற சத்தான பொரியல்.

ஆயத்த நேரம்: 15 minutes

 சமையல் நேரம்: 30 minutes

 பரிமாறும் அளவு: 3 loaf

தேவையான பொருட்கள்: 

- அரைக்கீரை - 1 கட்டு

- சின்ன வெங்காயம் (அரிந்தது) - 10

- வரமிளகாய் - 2

- கடுகு - 1 டீஸ்பூன்

- உளுந்து - 2 டீஸ்பூன்

- தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்

- உப்பு, எண்ணைய் - தேவைக்கேற்ப

 செய்முறை: 

 • அரைக்கீரையை கழுவி பொடியாக நறுக்கவும்

 • வாணலியில் எண்ணைய் விட்டு கடுகு, உளுந்து தாளித்து வெங்காயம், மிளகாய் போட்டு வதக்கவும் 

 • இதனுள் தண்ணீரில் கழுவிய கீரையை போட்டு உப்பும் சேர்த்து மூடி போட்டு வேக வைக்கவும் • தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளிக்கவும் 

 • கீரை நன்றாக வெந்ததும் தேங்காய்த்துருவல் போட்டு இறக்கவும் 


குறிப்பு: 

 • சுவையான அரைக்கீரைப் பொரியல் ரெடி குறிப்பு: விருப்பம் இருந்தால் மிளகு, சீரகம் மற்றும் வேர்க்கடலை ஆகியவற்றை அரைத்து, அந்த பொடியை பொரியலுடன் சேர்க்கலாம். சுவை கூடும்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்