தக்காளி குழம்பு
சமையல் வல்லுநர்: Mangayarkarasi
தேதி : jun 3, 2015ஆயத்த நேரம்: 15 minutes
சமையல் நேரம்: 15 minutes
பரிமாறும் அளவு: 2 loaf
தக்காளி குழம்பு
விரிவுரை :
இது சாதம் மற்றும் இட்லிக்கு பொருத்தமாக இருக்கும்தேவையான பொருட்கள்:
- தக்காளி - 3- சின்ன வெங்காயம் - 20
- கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 கொத்து
- கொத்தமல்லி - சிறிதளவு
- தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
- வரமிளகாய் - 2
- எண்ணைய், உப்பு - தேவைக்கு
தாளிக்க :
- கடுகு - 1 டீஸ்பூன்
- உளுந்து - 1 டீஸ்பூன்
- சின்ன வெங்காயம் (நறுக்கியது) - 5
- கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
•முதலில் வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்• வாணலியில் தேவையான எண்ணைய் ஊற்றி கடலைப்பருப்பு, வெங்காயம், வரமிளகாய் சேர்த்து வதக்கவும்
• பிறகு தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கவும் • கறிவேப்பிலை, கொத்தமல்லியை அதனுடன் சேர்த்து வதக்கி அடுப்பை அணைக்கவும். பிறகு தேங்காய்த்துருவல் சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கவும்
• இந்த கலவை ஆறியதும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
• வாணலியில் தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளிக்கவும். பின்பு அரைத்ததைக் கலந்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
கருத்துகள்
கருத்துரையிடுக