வெண்டைக்காய் வதக்கல்
சமையல் வல்லுநர்: Mangayarkarasi
தேதி : jun 3, 2015ஆயத்த நேரம்: 20 minutes
சமையல் நேரம்: 20 minutes
பரிமாறும் அளவு: 2 loaf
அரைக்கீரைப் பொரியல்
விரிவுரை :
இந்த வெண்டைக்காய் வறுவல் சத்தான மற்றும் சுவையான ரெசிப்பி.தேவையான பொருட்கள்:
- வெண்டைக்காய் - 15- சின்ன வெங்காயம்(அரிந்தது) - 10
- தக்காளி - 1
- மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
- பெருங்காயத்தூள் - சிறிது
- கடுகு - 1 டீஸ்பூன்
- உளுந்து - 2 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 கொத்து
- பொட்டுக்கடலை பொடி - 1 டேபிள்ஸ்பூன்
- உப்பு, எண்ணைய் - தேவைக்கேற்ப
செய்முறை:
• வெண்டைக்காயை ஒரு இன்ச் நீளத்திற்கு கட் செய்யவும்• வாணலியில் எண்ணைய் விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும்
• வெங்காயம் சேர்த்து வதக்கவும், வெங்காயம் வதங்கியபின் தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கவும்
• பிறகு வெண்டைக்காய் சேர்த்து வதக்கவும்
• காய் பாதி வதங்கியதும் சிம்மில் வைத்து மொறு மொறுப்பாக வதக்கவும்
• பின் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்க்கவும்
• கடேசியாக பொட்டுக்கடலையை கரகரப்பாக பொடித்து சேர்த்து, கிளறி இறக்கவும்
கருத்துகள்
கருத்துரையிடுக